Super User / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதிக்கும் குருசோ வீதிக்கும் இடைப்பட்ட கழிவு நீர் செல்லும் வாய்க்கால் உரிய முறையில் வெட்டப்படாமையால் இப்பகுதியில் வாழும் சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கொழும்புத்துறை வீதியில் இருந்து குருசோ வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் பொது மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியூடாக செல்லும் இந்தக் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் நீர் செல்வதற்கு வசதியாக ஆழமாக்கப்பட்டது.
இந்நிலையில், கொழும்புத்துறை வீதிக்கும் குருசோ வீதியின் வடக்குப் புறமாக உள்ள கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் கழிவு நீர் தேங்கிக் காணப்படுகின்றது.
இதேவேளை, குருசோ வீதியூடாகக் கடற்கரைக்குச் செல்லும் தெற்குப் புற கழிவு நீர் வாய்க்கால் மணல் நிறைந்து நீர் செல்ல முடியாது தடைப்பட்டு காணப்படுகின்றது.
இதன் காரணமாக குருசோ வீதிக்கும் கொழும்புத்துறை வீதிக்கும் இடைப்பட்ட சுமார் நானூறு மீற்றர் இடைப்பட்ட பகுதி கழிவு நீர் வாய்க்காலில் கழிவு நீர் தேங்குவதன் மூலம் நுளம்பு பெருகி காணப்படுவதுடன் துர் நாற்றமும் வீசும் நிலையும் காணப்படுகின்றது.
இது சம்பந்தமாகப் பொது மக்கள் பல தடவைகள் யாழ். மாநகர சபையினருக்கும் பொது சுகாதரா பரிசோதகர்களுக்கும் தெரிவித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையெனவும் இதனால் டெங்கு நோய் பரவுமா என்ற அச்சத்துடன் இந்தப் பகுதி மக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago