Super User / 2010 நவம்பர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிவரும் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை பதிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லங்களில் இணைக்குமாறும் பெற்றோருடன் இணைக்கக்கூடிய பிள்ளைகளைப் பெற்றோருடன் இணைக்குமாறும் யாழ். மாவட்ட சிறுவர் நன்னடத்தை அலுவலர்களுக்கு வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
யுத்த காலத்துக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் அனுமதி பெறாதநிலையில் சிறுவர் இல்லங்கள் அதிகரித்துள்ள நிலையில் இவை பிரதேச செயலகங்களின் கீழ் வலிந்து உதவும் நிறுவனங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் மாவட்டங்களில் உள்ள சிறுவர் நன்னடத்தை அலுவலகங்களுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago