A.P.Mathan / 2010 நவம்பர் 11 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை எனவும் தனக்காக பாதுகாப்பு கோரவில்லை எனவும் யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
யாழில் இன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் உயரதிகாரிகள் வருகைதந்திருப்பதோடு சாட்சியமளிப்பதற்காக எல்.ரி.ரி.ஈ.யின் முக்கிய உறுப்பினர்களான யோகரத்தினம், புதுவை ரத்தினதுரை, யோகி போன்றோரின் மனைவியர் வருகைதரவிருந்தமையாலும் யாழ்பாணத்தின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு யாழ். மாவட்ட கட்டளை தளபதியை நான் வேண்டியிருந்தேன். இதனால் யாழில் இன்று வழமையைவிட பாதுகாப்பு அதிகரித்தே காணப்பட்டது. இவ்விடயத்தை தவறாக புரிந்துகொண்ட சில ஊடகங்கள் எனது பாதுகாப்பை அதிகரிக்கும்படி படையினரை கோரியுள்ளதாகவும் புலம்பெயர் சமூகத்தினால் எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்டிருக்கின்றனர். எனக்கு எந்தவிதமான பாதுகாப்பும் அதிகரிக்கப்படவுமில்லை அதிகரிக்கவேண்டிய தேவையுமில்லை என தெரிவித்தார்.
இதேவேளை வடமாகாணசபை தேர்தலில் இமெல்டா சுகுமார் போட்டியிடப்போவதாக வெளிவந்த செய்தி தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபரிடம் கேட்டபோது...
'அரசியலில் நுழைவது பற்றி நான் ஒருபோதும் சிந்திக்கவில்லை. ஒரு தமிழ் பிரதிநிதி என்ற ரீதியில் முதன்மைநிலை அதிகாரியாக நான் இருக்கின்றேன். அரச அதிபராக இருந்துகொண்டே மக்களுக்கு தாராளமாக சேவைகளை செய்ய முடியும். நான் ஓய்வுபெறுவதற்கு இன்னமும் நீண்டகாலம் இருக்கிறது. இந்நிலையில் அரசியலில் நுழைந்து எனது நற்பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அரச அதிபராக இருந்துகொண்டே மக்களுக்கு அதிகளவான சேவைகளை வழங்க விரும்புகின்றேன்..' என்று குறிப்பிட்டார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
koneswaransaro Sunday, 14 November 2010 05:32 PM
எவரது அச்சுறுத்தலின் பேரில் இப்படியொரு அறிவிப்பு?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago