Suganthini Ratnam / 2010 நவம்பர் 19 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ள பொறியியற்பீடத்தின் இணைப்பாளராக பேராசிரியர் எஸ்.ஆர்.எச்.ஹூல் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கவால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியற்பீடம் அமைப்பதற்கான பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்தல், பொறியியற்பீடத்தின் இயக்கத்திற்கான தேவைகள், நிதி ஆதாரங்களை முன்மொழிதல், இந்தியாவின் நிதியுதவியைப் பெற்றுப் பீடத்தை உருவாக்கும் சாத்தியப்பாடு பற்றிய அறிக்கை தயாரித்தல் போன்ற உடனடிப் பணிகளை ஆற்றுமாறு இவரிடம் கோரப்பட்டுள்ளது. மேலும் பீடம் அமைக்கப்படும்போது ஏற்படுத்தவேண்டிய துறைசார் சிபார்சுகளும் கோரப்படுகின்றன.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 27ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளும்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியற்பீட உருவாக்கத்திற்கு இந்தியா எவ்வெவ் வழிகளில் உதவமுடியுமென்பதற்கான திட்ட அமுலாக்கல் அறிக்கையை பேராசிரியர் ஹூல் வழங்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.
47 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago