2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நாகர்கோவில் பகுதியில் வீதி புனரமைப்பு நடவடிக்கைகள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 24 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹெமந்த்)

வடமாராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள உள் வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கின் துரித மீட்சித் திட்டத்தி்ன் கீழ் இந்தப்பணிகள் நடைபெறுகின்றன. இந்த வீதிகளைப் புனரமைப்பதற்கு 27 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் நடந்த காலப்பகுதியில் நாகர்கோவில் பிரதேசம் யுத்த சூனியப் பிரதேசமாக இருந்தது. இதன்காரணமாக இநதப் பிரதேசத்தின் உட்கட்டுமானங்கள் முற்றாகவே அழிவடைந்துள்ளன.

இப்போது மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறுவதை அடுத்து இந்தப் பிரதேசத்தின் உட்கட்டமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக பருத்தித்துறை - மருதங்கேணி வீதியிலிருந்து கடற்கரைப்பக்கமாகச் செல்லும் உள்வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் புனரமைப்புக்கான நிதியை வடக்கின் துரித மீட்சித்திட்டம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X