2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் தொடர் மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக கரையோரப் பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாவாந்துறை, காக்கைதீவு, பொம்மைவெளி, குச்சவெளிக்
கிராமங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் இப்பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயமுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் நாம் இப்பகுதிகளில் தொடர்ந்தும் இருக்க முடியாதெனவும் ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளிலேயே நாம் தங்கவேண்டி ஏற்படுமெனவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்;. மேலும் எமது பகுதிகளுக்கு அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் வந்து சென்றபோதிலும்,  எவ்வித உதவிகளும்
கிடைப்பதில்லையெனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை 8.30 மணியிலிருந்து வியாழக்கிழமை காலை 8.30
மணிவரை 58.7 மில்லிலீற்றர்  மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இம்மாதம் முதலாம் திகதி முதல் 24ஆம் திகதி வரை 269.0 மில்லிலீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலத் திணைக்களத்தின் யாழ.; அலுவலகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X