2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிவாஜிலிங்கம் போட்டி?

Super User   / 2011 ஜனவரி 26 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

வல்வெட்டித்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டபோது, இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டியலில் போட்டியிடுவதற்காக கட்சியின் பொருளாளர் குலநாயகத்தின்  ஊடாக சிவாஜிலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

எனினும் இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதாகவும்  சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X