2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பிரதான கட்சிகள் இன்று யாழில் வேட்புமனுத் தாக்கல்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 27 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். மாவட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும்  ஐக்கிய சோசலிசக் கட்சியும் தற்போது தாக்கல் செய்துள்ளன.  

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரம் முதலாவது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் திருமதி விஜயகலா மகேஸ்வரனும்  ஐக்கிய சோசலிசக் கட்சி சார்பில் அதன் தலைவர் ஸ்ரீதுங்க ஜயசூரியவும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசாவும் எம்.ஏ.சுமந்திரனும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X