A.P.Mathan / 2011 பெப்ரவரி 12 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழுக்கு தென்னிலங்கையில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பலர் யாழ். வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்வையிட்டு அவர் அருகில் நின்று புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துக் கொள்ளவும் முண்டியடித்து வருவதாக வல்வெட்டித்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
80 வயதான பார்வதி அம்மாள் மிகவும் நோய்;வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் இவ்வேளையில், அவருடைய நிலையைப் பொருட்படுத்தாத தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு நடந்து கொள்வது பெரும் கவலைக்குரிய விடயமாகும் என அங்குள்ள வைத்தியர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச வைத்தியசாலை என்பதால் நோயாளர்களைப் பார்வையிட வருவோரை தடுக்கமுடியாது எனவும் அங்கு கடமையிலுள்ள வைத்தியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
31 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago