Super User / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நகரப் பகுதிக்கு பெருந்தொகையான ஜெலிக்னைற் குச்சிகளுடன் சென்ற லொறி ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவ தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட லொறியில் இருந்து 115 ஜெலிக்னைற் குச்சிகளும், 90 வெடிக்க வைக்கும் கருவிகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர்,
சந்தேகத்துக்கிடமான பொருட்களுடன் லொறி ஒன்று சென்றுகொண்டிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினை அடுத்து, பிரஸ்தாப லொறி மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டதாகவும், சோதனையின் போது வெடி பொருட்கள் சிக்கியதாகவும், யாழ். பொலிஸ்அத்தியட்சகர் நெவில் பத்மதேவ தெரிவித்தார்.
லொறியைச் செலுத்தி வந்த சாரதியும், அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு, யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர் நாளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
40 minute ago
48 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
48 minute ago
6 hours ago
21 Dec 2025