2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பல்வேறு சிரமங்களுடன் வாழும் யாழில் குடியேறிய முஸ்லிம்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 10 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அண்மையில் புத்தளத்திலிருந்து யாழ். நவாந்துறை புதிய சோனகத்தெரு பொம்மைவெளிப் பகுதியில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே அன்றாட வாழ்க்கையை கழித்து வருவதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.  

'புத்தளத்திலிருந்து வந்து எமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறியுள்ளோம். எங்களது மீள்குடியேற்றத்தின்போது எந்தவித அடிப்படை வசதிகளோ அல்லது நிவாரணமோ வழங்கப்படவில்லை.  இந்நிலையில் தடிகள், கம்பிகள் மற்றும் கிடுகுகளை பயன்படுத்தி கொட்டில்கள் கட்டி வாழ்கிறோம்.  அம்முஸ்லிம் மக்கள் தெரிவித்தனர். இன்னும் சிலர் உடைவடைந்த வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்' என அவர்கள் குறிப்பிட்டனர்.  

"எமது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று கல்வி கற்பதற்கு போதிய வசதியில்லை. இதனால் அவர்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.  தமது ஜீவனோபாயத் தொழில் இரும்பு வியாபாரம் ஆகும்" என அவர்கள் கூறினர்.

1990ஆம் ஆண்டு இம்முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X