2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தாலிக்கொடியை அறுத்த பெண் பொதுமக்களால் பிடிக்கப்பட்டார்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 11 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். உடுவில் பகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் பெண்ணொருவர், வீட்டில்  தனிமையிலிருந்த பெண்ணை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திவிட்டு நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு முன்னாலுள்ள மரண வீட்டில் கலந்துகொண்டவர்கள் தாலிக்கொடியை அறுத்துச் சென்ற பெண்ணை துரத்திப் பிடித்து சுன்னாகம் பொலிஸில் ஒப்படைத்தனர். தாலிக்கொடி மீட்கப்பட்டது.

கத்தி காயத்திற்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X