2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மாணவன் கபில்நாத் கொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 17 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

2010ஆம் ஆண்டு சாவகச்சேரியில் இடம்பெற்ற மாணவன் கபில்நாத் கொலை வழக்கினை யாழ். மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான உத்தரவினை சாவகச்சேரி நீதவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கின் சாரம்சத்தின் அல்லது தோற்றத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதனை அடுத்தே அதனை யாழ். மேல் நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவன் கபில்நாத் கடந்த வருடம் மார்ச் மாதம் 16ஆம் திகதி அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். கப்பம் கோரியே இந்தக் கொலை இடம்பெற்றிருந்ததாக பொலிஸார் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X