2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில் திராவிட கட்டடக்கலை மரபு சார் கலாசார மண்டபம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 20 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இந்திய அரசின் நிதியுதவியுடன் திராவிட கட்டடக்கலை மரபில் யாழ். நகரில் 5 கோடி ரூபாய் செலவில் கலாசார மண்டபமொன்று எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக  இந்தியாவின் சர்வதேச கலாசார  செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் நாயகம் சுரேஷ்குமார் றோயல் தெரிவித்தார்.

யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்த இவர், ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே இதனைக் கூறினார்.

இக்கட்டடத்திற்கான ஆரம்ப நிர்மாணப் பணிகள் குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு அவர் விளக்கமளித்தார்.

அத்துடன், யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் மாநகரசபை உறுப்பினர்களுடன்  மேற்படி கட்டடம் அமையவுள்ள இடத்தை  இந்தியாவின் சர்வதேச கலாசார  செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் நாயகம் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ். துரையப்பா விளையாட்டரங்கம் சகல வசதிகளும் கொண்ட நவீனமயப்படுத்தப்பட்ட அரங்கமாக மாற்றியமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X