2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வன்னிக்கான வெளிநாட்டு தபால்ப்பொதிகள் யாழ். சுங்கத்திணைக்களத்தால் பரிசோதனை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 30 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வன்னிப் பகுதிகளுக்கு வருகின்ற வெளிநாட்டு தபால்ப்பொதிகள் அனைத்தும் யாழ். சுங்கத் திணைக்கள அலுவலகத்தால் பரிசீலிக்கப்பட்டு, பின்னர் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இன்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் வதியும் மக்களுக்கு வருகின்ற வெளிநாட்டுத் தபால்ப்பொதிகளே இவ்வாறு பரிசீலிக்கப்பட்டு அந்தந்த தபாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருகின்ற தபால்ப்பொதிகளில் கையடக்கத் தொலைபேசிகள், இறுவட்டுக்கள் ஆகியவற்றுக்கு இலங்கை தொலைத்தொடர்புத் திணைக்களத்தின் அனுமதியும்  பயிர்ச்செய்கைக்கான  விதைகள் இலங்கைப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அனுமதியும்  பெற்றிருந்தால் மாத்திரமே அனுமதிக்கப்படுமெனவும் யாழ். சுங்கத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X