Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கல்வித்துறையில் யாழ். சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது தனது தலையாய கடமையென யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக தெரிவான போரசிரியர் வசந்தி அரசரட்னம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இன்று காலை சம்பிராதயபூர்வமாக தனது கடமைகளை ஆற்றுமுன்னர் இச்செய்தியை அவர் விடுத்துள்ளார்
அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களைப்போன்று யாழ். பல்கலைக்கழகத்தையும் மாற்றியமைத்து சிறந்த கல்விமான்களை உருவாக்க வேண்டியது தனது பொறுப்பென்பதுடன், பல்கலைக்கழகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மனிதாபிமான முறையில் அணுகித் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
யாழ். கல்விச் சமூகம் மிகவும் சிறந்தது. அவர்களின் ஆதிர்வாதம் எனக்கு கிடைத்திருக்கின்றது. இதேநேரம் யாழ். பல்கலைக்கழகத்தை சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதையே நான் இலட்சியமாகக் கருதுகின்றேன் என்றார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago