Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
இளவாலையிலிருந்து, கொழும்பு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் அவரது தாயார் இன்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் யூனியன்ஸ் இன்சூரன்சில் கள அலுவலராக கடமையாற்றும் இராஜேந்திரமோகன் (வயது 34) என்பவரே காணாமல் போனவர் ஆவார்.
கடந்த 31ஆம் திகதி பிற்பகல் வேளையில் தனது வீட்டாருடன் கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மேற்படி குடும்பஸ்தர், தான் ரயிலில் கொழும்புக்கு பயணித்துக்கொண்டிருப்பதாகவும் பின்னர் தொடர்புகொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
பின்னர் அவர் எந்தவித தொடர்புகளையும் ஏற்படுத்தவில்லையென்பதுடன், உறவினர்களுடைய வீடுகளுக்கும் அவர்; செல்லவில்லையென்று உறவினர்கள் கூறியுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தனது கடமை சம்பந்தமாக பம்பலப்பிட்டி அலுவலகத்திற்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டுச்சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025