Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி)
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் 'பஞ்சரத்தின' இசைவேள்வி நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் உதவிப் பணிப்பாளர் திருமதி என். ஸ்ரீதேவி தெரிவித்தார்.
'பஞ்சரத்தின' இசைவேள்வி தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளதாகவும் இன்று தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.
வடமாகாண கல்விப் பண்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் பணிப்புரைக்கமையவும் வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவனின் வழிகாட்டலிலும் இந்த 'பஞ்சரத்தின' இசைவேள்வி நடைபெறவுள்ளது.
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கீழைத்தேய இசைக் கலைஞர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
தற்போது அருகிச் செல்லும் முரசு கொட்டுதலுடன் 'பஞ்சரத்தின' இசைவேள்வியின் தொடக்க நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
நாதஸ்வரம், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், தவில், வயலின் போன்ற வாத்தியக்கருவிகளின் இசை நிகழ்வுகளும் வாய்ப்பாட்டுக் கச்சேரியும் நடைபெறவுள்ளது. முதலில் நாதஸ்வர கச்சேரியுடன் ஆரம்பமாகவுள்ள 'பஞ்சரத்தின' இசைவேள்வியில் ஒவ்வொரு வாத்தியக் கருவிகளின் கச்சேரிக்கு 45 நிமிடமும் வாய்ப்பாட்டுக் கச்சேரிக்கு ஒரு மணித்தியாலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கீழைத்தேய இசைக் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தவும் கீழைத்தேய இசைக் கலையை வளர்த்தெடுக்கும் முகமாகவுமே இந்த 'பஞ்சரத்தின' இசைவேள்வி நடத்தப்படுவதாக திருமதி என்.ஸ்ரீதேவி தெரிவித்தார்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025