2025 ஜூலை 02, புதன்கிழமை

அதிக வெப்பநிலையால் சருமநோய் பரவல்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பநிலை காணப்படுவதால், சருமநோய்கள் பரவி வருவதாக யாழ். போதனா வைத்தியசாலை சருமநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சருமநோய்ப் பரம்பல் காரணமாக தினமும் 5 தொடக்கம் 18 வரையான நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகரித்த வெப்பம் காரணமாக வயோதிபர்களின் உடம்பில் படைபடையாக தோல் உரிவதுடன், சிறுவர்களின் உடம்பில் சிவப்பு நிறத்திலான கொப்புளங்கள் தோன்றுவதாகவும் வருவதாக யாழ். போதனா வைத்தியசாலை சருமநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டது.

சருமநோய் பரவி வருவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ். போதனா வைத்தியசாலை சருமநோய் கட்டுப்பட்டுப் பிரிவு தற்பொழுது மேற்கொண்டு வருகிறது.  எனினும், பொதுமக்கள் தங்களது உடம்பின் வெளிப்பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் உடம்பில் தோல் உரிதலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டாலோ உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலை சருமநோய் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .