Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழக பொறியியல்பீடத்தை கிளிநொச்சியிலுள்ள விவசாயபீடத்துக்கு அருகில் ஆரம்பிப்பதற்கான முடிவை யாழ். பல்கலைக்கழக மூதவையும் பேரவையும் இன்று வியாழக்கிழமை தீர்க்கமான முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக பதிவாளரினால் உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்ட செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள்ளதாவது,
யாழ். பல்கலைக்கழகத்தின் மூதவையும் பேரவையும் பொறியியல்பீடமொன்றை கிளிநொச்சியில் அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை விரைவில் தொடங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தின் மூதவையும் பேரவையும் தமது சமூகக் கடமையை நிறைவேற்றும் நோக்குடனும் பீடத்தை அமைப்பதற்கு ஏற்படக்கூடிய செலவீனங்களை குறைக்கும் நோக்குடனும் பொதுவான செலவீனங்களை விவசாயப்பீடத்துடன் பங்கிடக்கூடிய வாய்ப்பையும் முன்னைய குழுக்களின் பரிந்துரைகளையும் கருத்திற்கொண்டு பொறியியல்பீடத்தை மிக விரைவில் கிளிநொச்சியில் விவசாயபீடத்துக்கு அருகில் தொடங்குவதற்கான முடிவை எடுத்துள்ளது.
இதற்கான விபர அறிக்கையை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதிக்கு ஓரிருவாரங்களில் சமர்ப்பிப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago