Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 09 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பனைசார் உற்பத்திகள் தரமான பொருட்களையும், மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையிலும் அமையப் பெறவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (9) நடைபெற்ற பனைவளம் மற்றும் அது தொடர்பிலான ஆய்வுகள் ஆலோசனை குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'வட மாகாணத்தில் தரமான பனஞ் சாராயத்தை உற்பத்தி செய்வதுடன் இதன் மூலம் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளைப் பெருக்கிக் கொள்ளவும் முடியும் என்பதுடன் சமூக முன்னேற்றத்திற்கும் பங்களிக்க முடியும். அத்துடன் நாடளாவிய ரீதியில் 'கற்பகம்' விற்பனை நிலையங்களை நிறுவி அவற்றின் மூலமாக பனைசார்ந்த உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் பனைசார் உணவு உள்ளிட்ட உற்பத்திகளை விற்பனை செய்யக் கூடியதாகவும் அதுசார்ந்த குடும்பங்களின் வாழ்வை மேம்படுத்த முடியுமென்றும் அதுவே தமது தூரநோக்குக் கொண்ட சிந்தனையென்றும் தெரிவித்தார்.
முக்கியமாக பனைசார்ந்த உற்பத்திப் பொருட்கள் சுத்தம் சுகாதாரமான முறையில் மட்டுமல்லாது தரமாகவும் உற்பத்தி செய்யப்படும் அதேவேளை இவற்றின் மூலம் மக்கள் அதிகளவான பயன்களை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலய மண்டபத்தில் அதன் தலைவர் பசுபதி சீவரத்தினம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் விற்பனை நிலையங்கள் மற்றும் அதுசார்ந்த பனம்பான உற்பத்திகள் தொடர்பில் பிரச்சினைகள் தொடர்பாக மாகாண மதுவரித் திணைக்கள ஆணையாளர் கிறிஸ்ரி ஜோசப் விளக்கங்களை வழங்கினார்.
இதேபோன்று பனங்களி மூலம் செய்யப்படும் உற்பத்திகள் தொடர்பாக குறிப்பாக பனாட்டின் மருத்துவ குணங்கள் தொடர்பாகவும் மற்றும் பனங்கிழங்கு பனம்பாணம் பனங்கட்டி உள்ளிட்ட பனைசார் உணவுகள் தொடர்பாகவும் அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் யாழ். பல்கலைக் கழக உயிரியல் இராசாயனத்துறை விரிவுரையாளர் கலாநிதி பாலகுமார் எடுத்து விளக்கியதுடன் பனைசார்ந்த உணவுகள் தொடர்பிலும், மருத்துவக் குணாம்சங்கள் தொடர்பிலும் மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பனை அபிவிருத்திச் சபை மூலம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு செயற்திட்டங்கள் தொடர்பாகவும் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் பனை வெல்லத்தை உற்பத்தி செய்வது மற்றும் அதற்குரிய இயந்திர சாதனங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அத்துடன் திக்கம் வடிசாலை மன்னாரிலுள்ள வினாகிரி தொழிற்சாலையை மீள் புனரமைப்பது கொழும்பு பனை அபிவிருத்தி சபையின் கிளைக் காரியாலய நிர்வாக நடைமுறைகள் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டிருந்ததுடன் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
முன்பதாக பனை அபிவிருத்திச் சபையின் தலைமைக்காரியாலய வளாகம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை வளாகம் என்பவற்றின் சுத்தம் சுகாதாரம் தொடர்பாக யாழ் மாநகர சபை ஊடாக மேற்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டார்.
இன்றைய கலந்துரையாடலில் பனை அபிவிருத்தி சபையின் மாகாண. மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார்ந்த அதிகாரிகளும். மாவட்டத்தைச் சேர்ந்த பொது முகாமையாளர்கள் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago