A.P.Mathan / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாதகல் மேற்கு மீனவக் குடும்பங்களை மீள் குடியேற்றம் செய்யுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வலி. தென் மேற்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான முருகேசு சந்திரகுமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாதகல் விநாயகர் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி சுப்பிரமணியம் பின்வரும் கோரிக்கையை முன்வைத்துள்ளார். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் கீழுள்ள J/152 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்து வந்த 300இற்கும் அதிகமான மீனவக் குடும்பங்கள் இராணுவ நடவடிக்கை காரணமாக 1992ஆம் ஆண்டிலிருந்து இடம்பெயர்ந்து உறவினர், நண்பர்கள் வீடுகள் மற்றும் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானச் சூழ்நிலையில் பல இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோல் எம்மையும் மீள்குடியேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025