2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவன் மாயம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கேரதீவு சங்குப்பிட்டி பகுதியிலுள்ள கடலில் குளித்துக்கொண்டிருந்தவேளையில் மாணவன் ஒருவன்  காணாமல் போயுள்ளான்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. கடலில் காணாமல் போன மாணவனை மீட்கும் பணிகள் இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. 

உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந் நிமலன் (வயது 14) என்ற மாணவனே காணாமல் போயுள்ளதாக உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் ஒருவருடன் கல்விச் சுற்றுலாவுக்கு சென்றிருந்த நிலையிலேயே,  கேரதீவு பகுதிக் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளையில் காணாமல் போயுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X