2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கடத்தல், கப்பம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் கடத்தல் மற்றும் கப்பம் பெற முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஐந்து இலட்சம் ரூபாய் தர வேண்டுமென்று  கூறி வர்த்தகர் ஒருவருக்கு இம்மூவரும் தொலைபேசி மூலம்; மிரட்டல் விடுத்துள்ளதாக படையினர் தெரிவித்தனர்.

சங்கானையிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை காலை வெள்ளை வானில் வந்த இம்மூவரும் கப்பம் தர வேண்டுமென்றும் அவ்வாறு இல்லாவிடின் கடத்துவோமென்று வர்த்தகரை எச்சரித்திருந்தனர். 

இவர்களின் மிரட்டலை செவிமடுத்த மேற்படி வர்த்தகர், அருகிலுள்ள உடுவில் படைமுகாமில் முழு விபரத்தையும் தெரிவித்திருந்தார். 

இராணுவத்தினர் அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுத்து இரகசியமான முறையில் இம்மூவரும் நேற்று கைதுசெய்யப்பட்டு இராணுவத்தினரால் மானிப்பாய் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X