2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நல்லூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்திப் பிரிவினரின்  சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தயாபரி கிரிதரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம், சிறப்பு விருந்தினராக சமூகசேவைகள் உத்தியோகத்தர் திருமதி பா.வைதேகி;, கௌரவ விருந்தினராக நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில் நந்தனன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்வுகளாக பட்டிமன்றம், கவியரங்கு, நடனங்கள் மற்றும் பரிசளிப்பு என்பன நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .