Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ். மாவட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் தையல் அழகியல் கண்காட்சி 18ஆம் 19ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ். மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலர் திருமதி நவமணி அலோசியஸ் ஜெயராஜன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் பிரதம விருந்தினர்களாக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலெட்சுமி ரமேஸ், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கலந்துகொள்ளவுள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் ஜே.ஜே.பெலிசியன், யாழ். மாவட்ட பிராந்திய ஆணையாளர் திருமதி பத்மினி சிவலிங்கம் கலந்துகொள்ளவுள்ளனர். கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம், வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை அதிபர் திருமதி க.பொன்னம்பலம் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
38 minute ago
55 minute ago