Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி அகலிப்பு பணிகளின் ஒரு கட்டமாக இணுவிலுக்கும் சுன்னாகத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள மதகுகளின் அகலிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே மதகுகள் காணப்பட்ட வீதியோரங்களில் புதிதாக நிர்மாணிக்கும் பொருட்டு ஒரு பக்க வீதியில் கிடங்குகள் வெட்டப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்தக் கிடங்குகள் இருப்பதை பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் அடையாளப்படுத்தும் முகமாக சிவப்பு விளக்குகள் பெருத்தப்பட்டுள்ளன. இருப்பினும் குறிப்பிட்ட சில சமிக்ஞை விளக்குகள் இரவு நேரத்தில் எரியாது காணப்படுகின்றன.
இதனால் பாதசாரிகளும் வாகன சாரதிகளும் இந்த கிடங்குகளில் சிக்குண்டு விபத்துகளுக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago