Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். செயலக மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவஞானம் ஸ்ரீதரன், எஸ்.சரவணபவன், ஐ.தே.க.வின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண ஆளுநரின் செயலாளர், திணைக்களத் தலைவர்கள் பிரதேசசபைத் தலைவர்களெனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
யாழ்;. மாவட்ட பிரதேச செயலகங்களிலிருந்து பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவித அழைப்புக்களும் விடுக்கப்படுவதில்லையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் விவாதம் எழுப்பியுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்கள் ஒருதலைப் பட்சமாக செயற்படுவதுடன், தங்களது கடமைகளில் பொறுப்பாக செயற்படவில்லையென்றும் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடைய கேள்விகளுக்கு மழுப்பல் முறையிலேயே பதிலளிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இதன்போது தெரிவித்தார்.
மேலும் யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் எவரையும் தங்களுக்கு தெரியாதென்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சரவணபவன் கேள்வியெழுப்பினார். இந்த நிலையில், பிரதேச செயலாளர்கள் ஒவ்வொருவரையும் எழும்பி நின்று கூட்டமைப்பினருக்கு அறிமுகப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தார்.
தற்போது நடைபெற்றுவருகின்ற யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
30 minute ago
31 minute ago