2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ். இந்துக்கல்லூரி ஆசிரியை வல்லுறவுக்கு பின் மரணம்; பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கடந்த 8ஆம் திகதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட யாழ். இந்துக்கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியை, பாலியல் வல்லுறவுக்கு பின்னரே மூச்சுத்திணறால் மரணமடைந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது உடம்பின் பல்வேறு பாகங்களிலும் நகத்தின் கீறல்கள் காணப்படுவதுடன், இவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பிரேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி இதனை உறுதிப்படுத்தினார்.

இக்;கொலை சம்பந்தமாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

யாழ். சில்லாலையைச் சேர்ந்த செல்வராஜா அனுஷா (வயது 27) என்ற ஆசிரியையே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X