Menaka Mookandi / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். ஆனையிறவு உப்பளப் பகுதிகளில் டி.ஏ.எஸ்.எச். நிறுவனம் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை தற்போது மேற்கொண்டுவருவதாக யாழ். ஆனையிறவு உப்பள நிருவாகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் கூடுதலான உப்பு உற்பத்தியில் முக்கியத்துவம் பெறும் இடங்களில் ஒன்றாக ஆனையிறவு காணப்பட்ட போதிலும் கடந்தகால யுத்த அனர்த்தங்களினால் இதன் செயற்பாடு முற்றாக தடைப்பட்டு இருந்தது.
தற்போதைய காலச்சூழலில் ஆனையிறவு உப்பளத்தை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக அப்பகுதியைச் சூழவுள்ள கண்ணிவெடிகள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்புச்சாலை மற்றம் அலுவலகக் கட்டிடத் தொகுதி ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள் அகற்றப்பட்டதன் பின்பு உப்பளம் முழுவீச்சுடன் ஆரம்பிக்கப்படும் என்று அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago