2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ். இந்துக்கல்லூரி ஆசிரியை மரணம் தொடர்பில் காதலன் கைது

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். இந்துக்கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையின் கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் இளவாலைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இளவாலையைச் சேர்ந்தவரான மேற்படி ஆசிரியையின் காதலன் என்பவரே நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டவர் ஆவர்.

இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளார்.

இவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். இந்துக்கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியை ஒரு வாரமாக காணாமல் போன நிலையில் கடந்த 8ஆம் திகதி வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

யாழ். சில்லாலையைச் சேர்ந்த செல்வராஜா அனுஷா (வயது 27) என்ற ஆசிரியையே தூக்கில் தொங்கியவாறு  மீட்கப்பட்டவர் ஆவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .