2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். கோட்டை அகழியை ஆழமாக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கோட்டையின் அகழியினை ஆழமாக்குவது தொடர்பாக யாழ். தொல்பொருள் அகழ்வாராட்சித் திணைக்களம் தடவையியல் நிபுணர்களுடன் ஆராயவுள்ளதாக யாழ்.தொல்பொருள் திணைக்களம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

யாழ். கோட்டையிலுள்ள அகழியில்; அதிகளவான கழிவுப் பொருட்கள் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அசௌகரியங்;களுக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில்,  அகழியைத்  தூய்மையாக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொல்பொருட்கள் நிறைந்த பொக்கிஷமாக அகழி இருப்பதினால் தடவையியல் நிபுணர்களின் உதவியுடனே இது மேற்கொள்ளப்பட வேண்டுமென தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விரைவில் யாழ். கோட்டையிலுள்ள அகழியைத் தூய்மையாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X