Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
எதிர்வரும் 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் அற்ற பூமியாக மாறுமென யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
வடபிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலகம் நடத்தும் மிதிவெடிக் கண்காட்சி யாழ். இந்துக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. கண்காட்சியின் இறுதிநாளான இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
யாழ்ப்பாணத்தில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மிக ஆபத்தான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன.
யுத்தப் பாதிப்புக்களிலிருந்து தழிழ் மக்கள் முழுவளவில் மீளுவதற்கு நாட்கள் எடுக்கும். ஆனால் யுத்தத்தின் மற்றுமொரு அறுவடையாக அங்கவீனங்கள் ஏற்படுவதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில், எதிர்வரும் 2012ஆம் ஆண்டு கண்ணிவெடிகள் அற்ற பூமியாக மாறும். இதற்கு அனைவரினதும் பங்களிப்பு மிக அவசியமாகும் என்றார்.
இந்தக் கண்காட்சியில் ஹலோ டிரஸ்ட் டெனிஸ் இராணுவ மிதிவெடியகற்றல் பிரிவு, வடபிராந்திய மிதிவெடி அகற்றல் அலுவலகம், சொண்ட் ஆகிய நிறுவனங்கள் தமது படைப்புக்களை காட்சிப்படுத்தியுள்ளன. அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மிதிவெடிகளின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் அதன் செய்முறை விளக்கங்களை படையினர் மக்களுக்கு விளங்கப்படுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago