Menaka Mookandi / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். நாவாந்துறை ஒஸ்மானியா கல்லூரி வீதியில் வாழும் முஸ்லிம் மக்கள் தமது அன்றாட தேவைக்குரிய உணவுப் பொருட்கள் மற்றும் மீன், மரக்கறி வகைகள் கொள்வனவு செய்வதற்கு தினமும் கொட்டடி சந்தைக்கும் பெரியகடைச் சந்தைக்கு செல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்கு யாழ் நகரமேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் சந்தை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
யாழ். மாநகர முதல்வரின் பணிப்புரைக்கு அமைய அங்கு சந்தை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இச்சந்தையின் வேலைகள் முடிவடைந்து சந்தைமக்கள் பாவனைக்கு விடப்பட்டதும் இது வரைகாலம் அப்பகுதிமக்கள் அனுபவித்து வந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என யாழ். மாநகரமேயர் இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை யாழ் மாநகர சபை பொறியியலாளர் கமகே, தொழில்நுட்ப உத்தியேகத்தர் கு.சுரேந்திரன், மேற்பார்வையாளர் ஐங்கரன் ஆகியோர் இச்சந்தைக் கட்டத்திற்காண பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago