Menaka Mookandi / 2011 ஏப்ரல் 22 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். அரியாலை படை முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
லான்ட்ஸ் கோப்ரால் பதவிநிலை வகிக்கும் ரவீந்திர குமார என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார். இவரது சடலத்தை இராணுவத்தினர் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சடலம் பிரேதப் பிரேதப் பரிசோதனைகள் இடம்பெற்றதன் பின்னர் மீண்டும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago