Menaka Mookandi / 2011 ஏப்ரல் 25 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். சண்டிலிப்பாய், மாசியப்பெட்டி பிரதேச வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவனொருவரின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். ரவீந்திரகுமார் பௌசன் (வயது 18) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
2012ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இம்மாணவன் இன்று திங்கட்கிழமை காலை பாடசாலைக்குச் செல்வதற்கு புறப்படாதிருந்ததையடுத்து அவரது பெற்றோர் அவரை கடுமையாகப் கண்டித்துள்ளனர்.
இதனையடுத்து கோபமடைந்த நிலையிலேயே அம்மாணவன் அறையொன்றுக்குள் சென்று தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நீதிவான் விசாரணைகளை அடுத்து இன்று மாலை 3.30 மணியளவில் சடலத்தினை யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாணிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைகளை அடுத்து சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago