Menaka Mookandi / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள புகையிரதக்கடவைக் வெளியில் கொட்டப்படும குப்பைகளினால் அந்தப் பகுதியின் சுற்றாடல் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்கும் உள்ளாகும் துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டுள்ளது.
பொது மக்களும் பாடசாலை மாணவர்களும் அதிகம் போக்குவரத்துச் செய்யும் அரசடி வீதி மற்றும் புகையிரத வீதி ஆகிய இடங்கள் இதனால் கடுமையாக சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளதுடன் அயலில் குடியிருப்பவர்கள் துர்நாற்றத்தின் மத்தியில் வாழ வேண்டிய நிலமையும் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையினர் சேகரிக்கும் குப்பைகளும் கூட இந்த இடத்தில் குவிக்கப்பட்ட பின்னர்தான் ஏற்றிச்செல்வது வழமையாகும். தற்போது யாழ்ப்பாணத்தில் காலநிலை தப்பிப் பெய்யும் மழை மற்றும் பொது மக்கள் கொண்டுவந்து போடும் மிருகங்களின் கழிவுகள் எனப் பலதினாலும் பெரும் பாதிப்பு எற்பட்டுள்ளதுடன் அயலில் உள்ள பாடசாலை மாணவர்களும் கஸ்டங்களுக்கு உள்ளாகின்றார்கள்.
.jpg)
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago