Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மிருசுவிலில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலை புதைகுழியைப் பார்வையிடுவதற்காக கொழும்பிலிருந்து நீதிபதிகள் குழாம் நாளை புதன்கிழமை யாழ். செல்லவுள்ளனர்.
கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில் மிருசுவிலைச் சேர்ந்த ஞானபாலன் ரவிவர்மன் மற்றும் இரு குழந்தைகள் உள்ளிட்ட எட்டுப் பேர் கூட்டாகக் படுகொலை செய்யப்பட்டு மிருசுவிலில் புதைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாகவே இந்த நீதிபதிகள் குழாம் யாழ். செல்லவுள்ளனர். மேற்படி எட்டுப் பேரையும் கூட்டுப் படுகொலை செய்தமை தொடர்பில் ஐந்து இராணுவத்தினருக்கு எதிராக ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.
வழக்கு தற்போதைக்கு ட்ரையல் அட்பார் முறையில் மூன்று நீதிபதிகள் குழாவினால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், வழக்கை விசாரணை செய்யும் நீதிபதிகள் சம்பவ இடத்தை நேரடியாக பார்வையிட்டு மேலதிக விபரங்களை சேகரிக்கவுள்ளனர்.
இதற்கிடையில், வழக்கின் சாட்சிகளான யாழ். மாவட்ட நீதிபதி, சாவகச்சேரி நீதிபதி, தற்போதைய வெல்லவ பொலிஸில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோரையும் சம்பவ இடமான மிருசுவிலுக்கு விஜயம் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 5 இராணுவத்தினரையும் கொழும்பிலிருந்து சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வழக்கு விசாரணைக்காக வரும் சாட்சிகள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago