Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி,தாஸ்)
யாழ். மிருசுவில் பகுதியில் கடந்த 2002ஆம் ஆண்டு 8 பேர் படுகொலை செய்யப்பட்டு சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான நேரடி விசாரணைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இந்த வழக்கை விசாரணை செய்து வரும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜயசுந்தர, டபிள்யூ.டி.எம்.பி.பி.வரவெல, சுனில் ராஜபக்ஷ ஆகியோர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு சமுகமளித்து அங்கிருந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தவுள்ளனர்.
நீதிபதிகளின் பாதுகாப்புக் கருதி சம்பவ இடத்தில் பொலிஸ் மற்றும் இ;ராணுவப் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டுள்ள 5 இராணுவத்தினரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு இன்று அழைத்து வரப்படவுள்ளனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago