Super User / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாநகர சபையின் இன்றைய கூட்டத் தொடரில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதையடுத்து சபை அமர்விலிருந்து யாழ். மாநகர மேயர் மூன்று தடவை சபையை விட்டு எழுந்து சென்றார்.
இன்று வியாழக்கிழமை காலை யாழ். மாநகர சபை கூட்டம் யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜ தலைமையில் ஆரம்பமானது.
ஆரம்பமானவுடன் யாழ். மேயர் மாநகர சபையினால் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுவரும் 5 மாடி சந்தை கட்டடத்தில் ஊழல் இடம்பெற்று வருவதாக கூறி, இது தொடர்பாக விவாதத்துக்கு வருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கையை மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஏற்றுக்கொண்டார்.
"இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். எந்த ஒரு விவாதத்துக்கும் நான் தயார். என்ன ஊழல் நடக்கிறது என்பதை அவர்கள் சொல்லட்டும்" என்றார் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா.
இந்தச் சந்தைக் கட்டடத்தை அமைக்கும் திட்டத்தை மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டே அது நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் கூறிய அவர், எந்தவொரு ஆதாரமுமின்றி இப்போது இதில் ஊழல் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூறிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ் நகரின் அபிவிருத்திக்காகவும், வர்த்தகர்களின் நன்மை கருதியுமே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இது சகிக்காதசிலர் திட்டமிட்டுஅதைக் குழப்புவதற்குமுயன்றுவருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் குறுக்கிட்ட எதிரனியினர் ஊழல் நிறைந் தமாநகர சபையை கலைக்க வேண்டும் எனக் கோசம் எழுப்பியுள்ளனர். காரசாரமான விவாதங்களுடன் சபை நடந்துகொண்டு இருக்கிறது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago