2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உயிருக்கு அச்சுறுத்தல்: யாழ். மாநகர சபை உறுப்பினர் நிஷாந்தன்

Super User   / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகர சபையில் ஆளும் தரப்புக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டதினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் சு.நிஷாந்தன் தெரிவித்தார்.

தனது உயிருக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுக் கொண்டு இருப்பதாகவும் இது குறித்து யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கும் யாழ். பொலிஸ் நிலையத்திலும் தான் முறையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் யாழ். மாநகர சபையின் ஆளும் தரப்பினரால் செய்யப்பட்ட ஊழல்களை ஆவணங்களுடன் வெளிக்கொண்டு வருவேன் மாநகர சபை உறுப்பினர் நிஷாந்தன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X