2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழில் மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் பல அபிவிருத்தித் திட்டங்கள்: அரச அதிபர்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யாழில் பின்தங்கிய கிராமங்களை மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் முன்னேறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் இந்த நிதியைப் பயன்படுத்தி 100 கிரமாமிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் வீடுகளற்ற மக்களுக்கும் பின்தங்கிய நிலையில் தனித்து வாழும் குடும்பங்களுக்கும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்காக் கொண்டு யாழ்.மாவட்ட செயலகத்தினால் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்படவுள்ளதாகவும் அவர் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X