Menaka Mookandi / 2011 ஏப்ரல் 29 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
கல்லூரி மாணவர்களின் கல்வி, கல்விசார் இதர விடயங்களில் முன்னேற்றத்தை நோக்காகக் கொண்டு பாடசாலைக்குரிய உபகரணங்கள் கையளிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வும் நாளைய தினம் இடம்பெறவுள்ளது. அத்துடன் நாளை மாலை 4 மணிக்கு கல்லூரியின் சுற்று மதில் அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
நாளைய காலை நிகழ்வில் கல்வி அதிகாரிகள், முன்னாள் கல்லூரியின் அதிபர்களும் கலந்து கொள்ளவுள்ளதுடன், அனைத்து நிகழ்வுகளிலும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகளையும் கலந்து சிறப்பிக்குமாறு பழைய மாவணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago