Suganthini Ratnam / 2011 மே 01 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் வயோதிப தாயொருவரை கொலை செய்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகத்தின் பேரில் அந்தத் தாயின் இரு மகன்களும் நேற்றிரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தங்களது வயோதிப தாயை கழுத்தில் கம்பியால் நெரித்து பாழடைந்த கிணற்றுக்குள் வீசிய சம்பவமொன்று யாழ். ஊர்காவற்றுறை இரண்டாம் வட்டாரத்தில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
விஸ்வலிங்கம் இராசம்மா (வயது 85) என்ற வயோதிப தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவர்.
இவர்கள் இருவரும் குறித்த தாயை கொலை செய்து விட்டு ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோது கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரிடமும் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago