Menaka Mookandi / 2011 மே 01 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தை எந்த தீய சக்தியாலும் அழித்துவிட முடியாது. ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போர்க்குற்றங்களின்படி இலங்கை அரசாங்கமானது தண்டிக்கபட வேண்டும் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஒரு இனத்தினுடைய அழிவிலிருந்து இன்னொரு இனம் பெருமைகொள்ளலாகாது என்றும் சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இலங்கை தமிழரசு கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் யாழ். மாவட்ட அலுவலகத்தில் தற்போது நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறில், தமிழரசு கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே மாவை எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ் மக்களது உரிமைகள் இன்னும் அழிக்கப்படவில்லை. ஆயுத வழி உரிமைகள் அழிக்கப்பட்டாலும் ஜனநாயக வழியிலான எமது உரிமைப் போரை நாங்கள் முன்னெடுப்போம். தமிழினத்தினுடைய விடிவுக்காக தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு உரிமையை மீட்டெடுப்போம்.
தமிழரசுக் கட்சியானது தமிழர்களுடைய உரிமையை முன்னெடுக்கின்ற ஒரு சிறந்த கட்சியாகும். இதன் பின்னணியில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது உரிமைக்கான குரலை மேதின அறைகூவலை நாங்கள் ஓங்கி ஒலிப்போம். காலம் தாழ்த்தாது இலங்கை அரசாங்கமானது தமிழர்களுடைய பிரச்சினையில் இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்' என்றார்.
.jpg)
3 hours ago
4 hours ago
CIDDEEQUE Monday, 02 May 2011 01:09 AM
உங்களுக்கு அக்கறை இருக்கிற மாதிரி சில தமிழ் எம் பி களுக்கு இல்லாமல் போனதை நினைத்து கவலை அடைகின்றேன். இன்ஷா அல்லாஹ் இதுக்குரிய முடிவு விரைவில் கிடைக்கும்.
Reply : 0 0
justiceseeker Tuesday, 03 May 2011 02:17 AM
இந்த அறிக்கை புலிகளை பற்றியும் குற்றம் சாட்டி உள்ளதே! அதனை மறைத்து விட்டு இலங்கை அரசுக்கு எதிரான பகுதிகளை மட்டும் தூக்கிப்பிடிப்பது என்ன விதத்தில் நியாயம்? புலிகளின் குற்றத்துக்கு உடந்தை ஆகவும் பாராமுகம் ஆகவும் இருந்த நீங்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago