2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் மீது தாக்குதல்; மன்னிப்பு கோரிய யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

Suganthini Ratnam   / 2011 மே 02 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் நடத்தப்பட்ட உரிமை போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு யாழ். பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளது.

'யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் நடத்தப்பட்ட உரிமை போராட்டம் தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு தாக்குதலுக்குள்ளான  ஊடகவியலாளரிடமும் ஊடக சமூகத்திடமும் நாங்கள் பகிரங்கமாக  மன்னிப்புக் கோருகிறோம்' என அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.  

'அன்றையதினம் இந்தத் தாக்குதல் தவறுதலாக இடம்பெற்றுள்ளது. இனிமேலும் இதுபோன்ற  அசம்பாவிதங்கள் நடைபெறாதிருக்க மாணவர்களாகிய நாம் ஊடகங்களுக்கு உத்தரவாதமளிக்கின்றோம்' என  யாழ். பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்பு பகிஷ்கரிப்பு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற உதயன் இணையத்தள ஊடகவியலாளர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மாணவர்களால் தாக்கப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X