Suganthini Ratnam / 2011 மே 02 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் இன்று திங்கட்கிழமை காலை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர். அர்த்தமற்றதான வகுப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டு மாணவர் சமூகத்தை குழப்புவதற்கு சில மாணவர்கள் முயன்று வருகின்றனர்.
இந்த மாணவர்கள் முன்வைத்துள்ள மூன்றம்சக் கோரிக்கை நிறைவேற்றக்கூடியது அல்ல. இவர்களின் மூன்றம்சக் கோரிக்கைக்கு எதிர்வரும் 6ஆம் திகதி தான் பதிலளிக்கவுள்ளதாகவும் அதுவரை மாணவர்களை பொறுமை காக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், வகுப்பு பகிஷ்கரிப்பை கைவிட்டு மாணவர்கள் அனைவரும் விரிவுரைகளுக்கு செல்லுமாறும் அவர் விடுத்துள்ள அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025