2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாதகலில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

Suganthini Ratnam   / 2011 மே 03 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாதகல் கடற்கரையில் கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாதகல் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை இரவு  கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து மேற்படி சடலம் மீட்கப்பட்டதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சடலம் அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்து காணப்படுகிறது. மூன்று அல்லது ஐந்து நாள்களுக்கு முன்னர் இறந்திருக்க வேண்டுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சடலம் இந்திய மீனவருடையதாக இருக்கலாமென்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X