Menaka Mookandi / 2011 மே 04 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
சர்வதேச கண்ணிவெடி தினம் சர்வதேச ரீதியில் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு கண்ணிவெடி அபாயம் பற்றிய கல்வியூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்று அண்மையில் யாழ்ப்பாணம், இந்துக் கல்லூரியில் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாண பிராந்திய நிலக்கண்ணி நடவடிக்கை அலுவலகம் மற்றும் யாழ். இராணுவ தலைமையகம் ஆகியன இணைந்தே இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
விரிவுரைகள், கலந்துரையாடல்கள், நாடகங்கள், பொருட்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் கண்ணிவெடி அபாயம் தொடர்பான ஆழமாக அறிவு, மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இதன்போது வழங்கப்பட்டன. அத்துடன் இலங்கை இராணுவத்தின் மோப்ப நாய்கள் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் முறை நேரடியாக செய்து காட்டப்பட்டமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, இந்த வேலைப்பட்டறையை ஒழுங்கு செய்வதில் தொடர்புபட்ட நிறுவனங்களின் அணிக்கும் இலங்கை இராணுவத்தின் அணிக்கும் இடையில் கிரிக்கெட் போட்டியொன்றும் இதன்போது நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago