Suganthini Ratnam / 2011 மே 05 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வலிகாமம் வடக்கிலுள்ள மேலும் ஒரு சில பகுதிகளில் இந்த வாரத்திற்குள்ள மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றத்திற்கான அனுமதி படைத்தரப்பினரால் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை யாழ். அரசாங்க அதிபரிடம், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நேற்று புதன்கிழமை விடுத்துள்ளார்.
இந்த பிரதேசத்தில் சுமார் 2,700 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கு தயாராகவுள்ளனர். மீள்குடியேற்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் யாழ். மாவட்ட செயலகம் மேற்கொண்டு வருகிறது. மாவிட்டபுரம், மாவிட்டபுரம் தெற்கு, தந்தை செல்வாபுரம், தெல்லிப்பளை, வறுத்தளை விளான், கொல்லங்கலட்டி, கீரிமலை, ஆகிய இடங்களில் இதுவரை விடுவிக்கப்படாத பகுதிகளிலும் பளை, வீமன்காமம் ஆகியவற்றின் வடக்கு, தெற்கின் ஒரு பகுதியிலும்; மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago